(English)
When I was in third standard, I accepted the Lord Jesus Christ as my personal Savior. The Lord has set me apart for Himself. From an early age, I was interested in directing souls toward the kingdom of God. When I told a young man on the street about the Lord, he kicked me. I returned home with bleeding. My dad convinced me. Then several meetings (Children meet, youth meet, camping centre,etc.,.) carved me. I was engaged in ministries such as street sermons, village meetings, etc. The congregation (church) kept watching over me (1 Timothy 3: 1). Then I informed the congregation (church) of my desire to be baptized in the year 2019. I was baptized on 24: 02.2019 (even crucified with Christ; no longer I, but He that liveth in me.)
Baptism: Letting the world know that I have accepted the Lord Jesus Christ.
I found this Lockdown as a blessing. A great chance to read and meditate on scriptures. As per Mark 16:15 [Then he said unto them, Go ye into all the world, and preach the gospel to every creature] I began to spread the gospel via online. Then by the great grace of the Lord I began to make several posts under the name of AKR Ministries. I praise the Lord for thinking that the Lord uses me in this way. All Glory and honour be to God alone. Amen.
(Tamil)
நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை என் சொந்த இரட்சராக ஏற்றுக் கொண்டேன். கர்த்தர் என்னை தமக்கென பிரித்தெடுத்தாரர். சிறு வயதிலிருந்தே ஆத்துமாக்களை தேவனுடைய ராஜ்யத்திற்கு நேராய் வழி நடத்த ஆர்வம் கொண்டேன். தெருவில் ஒரு வாலிபனிடம் ஆண்டவரைப் பற்றி சொன்ன போது என்னை எட்டி உதைத்தான். குருதி வடிய வீடு திரும்பினேன். என் அப்பா என்னை சமாதானப்படுத்தினார். பின் பல கூடுகைகள் என்னை செதுக்கின. எனது தெருவில் துண்டு பிரதி மூலம் ஆண்டவருடைய அன்பை சொல்லிக்கொண்டிருந்த நான் சபையாருடன் சேர்ந்து தெரு பிரசங்கங்கள், கிராமங்கள் சந்திப்பு போன்ற ஊழியங்களில் ஈடுபட்டேன். என்னை சபையார் கண்காணித்துக்கொண்டு வந்தனர் (1 தீமோ 3:1). பின்னர் 2019 ஆவது வருடம் ஞானஸ்நானம் எடுக்கும்படியான என்னுடைய விருப்பத்தை சபைக்கு தெரியப்படுத்தினேன். 24:02.2019 அன்று ஞானஸ்நானம் பெற்றேன் ( கிறுஸ்துவுடனே கூட சிலுவையில் அறையப்பட்டேன்; இனி நான் அல்ல, அவரே என்னில் பிழைத்திருக்கிறார்.
ஞானஸ்நானம்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றக் கொண்டேன் என உலகத்திற்கு தெரியப்படுத்துதல்.
இந்த லாக்டவுன் வேத வசனங்களை தெளிவாக படிக்க எனக்கு கிடைத்த தருணம். மாற்கு 16:15 [பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.] இன் படி சுவிஷேசத்தை ஆன்லைன் வழியாக பரப்ப ஆரம்பித்தேன். பின்பு கர்த்தருடைய பெரிதான கிருபையால் ஏ கே ஆர் மினிஸ்ட்ரீஸ் என்னும் பெயரில் பல பதிவுகனை பதிவிட ஆரம்பித்தேன். ஆண்டவர் என்னை இவ்வண்ணமாய் பயன்படுத்துவதை நினைத்து ஆண்டவரை துதிக்கிறேன். அவர் ஒருவருக்கே துதியும் கனமும் மகிமையும் இன்றும் என்றும் சதாகாலங்களிலும் உண்டாவதாக. ஆமென்
15 And he said unto them, Go ye into all the world, and preach the gospel to every creature.
15 பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
16 He that believeth and is baptized shall be saved; but he that believeth not shall be damned.
16 விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.
Mark 16:15,16
மாற்கு 16:15,16
The event of the baptism of Andrew Kingsly Raj |ஆண்ட்ரு கிங்ஸ்லி ராஜ் ஞானஸ்நானம் பெற்ற நிகழ்வு -2019
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment